நடிகர் சிம்பு நடித்த முடித்துள்ள புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் சிம்பு மற்றும் இயக்குனர் கௌதமேனன் கூட்டணியில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்திற்கு முன்பாக கௌதமேனன் மற்றும் சிம்பு கூட்டணியில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் ஆனதால், வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், செப்டம்பர் 15-ஆம் தேதி படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சித்தி இட்னானி மற்றும் கயாடு லோகர் ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்க, ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் நடிகர் சிம்பு தற்போது படத்தின் டப்பிங் வேலையை நிறைவு செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.