நாவல் பழம் பறிக்க சென்ற மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சீனிமடை கிராமத்தில் மருதுபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனோஜ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கொம்புகாரனேந்தல் பகுதியில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மதிய உணவு இடைவேளையின் போது சில மாணவர்களுடன் சேர்ந்து மனோஜ் பள்ளிக்கு வெளியே சென்று நாவல் மரத்தில் ஏறி நாவல் பழம் பறித்துள்ளார்.
அப்போது மரத்தை தொட்டு மின்சாரம் ஒயர் சென்றதை கவனிக்காத மனோஜ் நாவல் பழங்களை பறித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மரக்கிளை முதிர்ந்து மின்சார ஒயர் மீது விழுந்ததில் அவர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்றொரு மாணவன் விக்னேசுவரன் பலத்த காயம் அடைந்துள்ளார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சடைந்த அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து விக்னேஸ்வரனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக கலெக்டர், துணை காவல்துறை சூப்பிரண்டு கண்ணன் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் யூனியன் தலைவர் லதா மற்றும் ஒன்றிய திமுக செயலாளர் அண்ணாதுரை ஆகியோர் உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறியுள்ளனர்.