Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“அடக்கம் செய்ய மாட்டோம்” இரு தரப்பினர் இடையே தகராறு…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!

மயானத்திற்கு செல்லும் பாதை சம்பந்தமாக இருதரப்பினர் இடையே தகராறு இருந்ததால் இறந்த மூதாட்டி உடலை அடக்கம் செய்ய மறுத்து கிராம மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள தீவட்டிப்பட்டி நைனாகாடு பகுதியில் 250-க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் யாராவது இறந்தால் அருகில் இருக்கும் கூகுட்டப்பட்டி ஊராட்சி சரபங்கா ஆற்றோரம் அடக்கம் செய்வதை வழக்கமாக வைத்திருந்திருக்கின்றனர். இந்நிலையில் நைனா காட்டிலிருந்து மயானத்திற்கு செல்லும் பாதை சம்பந்தமாக இரு தரப்பினர் இடையே நீண்ட நாட்களாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் உடலை மயானத்திற்கு கொண்டு செல்ல பாதை வசதி இல்லாமல் அப்பகுதி மக்கள் அவதிப்படுவதுடன், அடிக்கடி போராட்டம் நடத்தி வந்துள்ளனர். தற்போது அதே பகுதியில் வசிக்கும் சின்னத்தாயி திடீரென உயிரிழந்துள்ளார். பின்னர் அவரது உடலை அடக்கம் செய்ய பாதை அமைத்து தந்தால் தான் உடலை கிராமத்தில் இருந்து எடுப்போம் என கூறி ஊர் மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது பற்றி தகவல் அறிந்த துணை காவல்துறை சூப்பிரண்டு சங்கீதா, தாசில்தார் அருள் பிரகாஷ் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஊர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதன் பிறகு இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி பொக்லைன் இயந்திரம் கொண்டு வந்து மயானத்துக்கு செல்லும் பாதை சுமார் 250 மீட்டர் தூரம் அமைக்கப்பட்டுள்ளது. பின்னர் இறந்த மூதாட்டி உடலை பொதுமக்கள் எடுத்துச் சென்று அடக்கம் செய்துள்ளனர்.

Categories

Tech |