தந்தை மகளை தாக்கிய 5 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மஞ்சப்புத்தூர் கிராமத்தில் ஞானகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தியா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அதே ஊரில் வசிக்கும் முனுசாமி என்பவர் சந்தியா வீட்டின் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது முன்விரோதம் காரணமாக முனுசாமி தனது ஆதரவாளர்களுடன் சென்று சந்தியாவிடம் இருந்த செல்போன் ரூ.6500 மற்றும் 2 பவுன் நகையை பறித்து சென்றுள்ளார்.
இதுகுறித்து சந்தியா தன் தந்தை வெங்கடேசனுடன் சென்று நகை, பணம் பறித்து சென்றது குறித்து முனுசாமியுடன் கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த முனுசாமி, சந்தியா மற்றும் அவரது தந்தை வெங்கடேசன் ஆகிய இருவரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து சந்தியா அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சங்கராபுரம் காவல்துறையினர் முனுசாமி, ஆதரவாளர்களான மணிகண்டன், பன்னீர், ஏழுமலை, சங்கர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.