Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(ஜூலை 30)…. மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்…..!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (ஜூலை 30) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டம்:

தூத்துக்குடி நகர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது. இதனால் தூத்துக்குடி போல்பேட்டை, ஆண்டாள் தெரு, சத்திரம் தெரு, 1-ம் கேட், 2-ம் கேட், மட்டக்கடை, வடக்கு பீச் ரோடு, வி.இ.ரோடு, பால விநாயகர் கோவில் தெரு, டூவிபுரம், ஜெயராஜ் ரோடு, மீனாட்சிபுரம், தாமோதர நகர், எட்டயபுரம் ரோடு, தெப்பக்குளம், சிவன்கோவில் தெரு, வ.உ.சி. ரோடு, சந்தை ரோடு, வடக்கு காட்டன் ரோடு, தெற்கு காட்டன் ரோடு, ஜார்ஜ் ரோடு, சண்முகபுரம், ஸ்டேட் வங்கி காலனி, இன்னாசியார்புரம், எழில்நகர், அழகேசபுரம், முத்துகிருஷ்ணாபுரம், குறிஞ்சிநகர், அண்ணாநகர், வி.வி.டி. மெயின் ரோடு, போல்டன்புரம், சுப்பையாபுரம், பாளையங்கோட்டை ரோடு, சிதம்பரநகர், பிரையண்ட்நகர், முத்தம்மாள் காலனி, கே.டி.சி.நகர், ஹவுசிங் போர்டு காலனி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது.

சிவகங்கை மாவட்டம்:

சத்திரக்குடி உபமின் நிலையத்தில் சனிக்கிழமை (ஜூலை 30) மாதந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் அன்று காலை 10 முதல் மாலை 4 மணி வரை சத்திரக்குடி, காமன்கோட்டை, முத்துவயல், கொடிக்குளம், கவிதைகுடி, சேமனூா், விளத்தூா், தோளூா், பொதுவக்குடி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

புதுக்கோட்டை மாவட்டம்:

குளத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் சனிக்கிழமை நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின் வினியோகம் பெறும், கீரனூர் பேரூராட்சி பகுதிகளான பரந்தாமன் நகர், கீழக்காந்திநகர் மேல காந்தி நகர், நான்கு ரத வீதிகள், எழில் நகர், என்.சி.ஓ. காலனி, முஸ்லிம் தெரு, பஸ் ஸ்டாண்ட், ஜெய்ஹிந்த் நகர், ஹவுசிங் யூனிட், பசுமை நகர், அழகு நகர் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது .

மதுரை மாவட்டம்:

மதுரை அண்ணாநகர் பிரிவுப்பகுதியில் உயரழுத்த மின்பாதைகளில், புதைவடம் (கேபிள்) இணைக்கும் பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக 30-ந் தேதி காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை அண்ணாநகர் கிழக்கு, குருவிக்காரன் சாலை, எஸ்.எம்.பி. காலனி, காமராஜர் தெரு, ஆலமரம் பஸ் நிறுத்தம், முதலியார் காலனி, ஜக்கா தோப்பு, அரவிந்த் மருத்துவமனை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

திருச்சி மாவட்டம்:

திருச்சி மாவட்டம் தங்கநகர் மற்றும் பாலகிருஷ்ணம்பட்டி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், சனிக்கிழமை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பை மின்வாரியம் வெளியிட்டுள்ளது. திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் பகுதியில் உள்ள தங்கநகர் மற்றும் பாலகிருஷ்ணம்பட்டி துணை மின் நிலையங்களில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று  நடக்கிறது. இதனால், காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

மின் தடை ஏற்படும் பகுதிகள்: எஸ்.என்.புதூர், இ.பாதர்பேட்டை, ஆர்.கோம்பை, பாலகிருஷ்ணம்பட்டி, புதுப்பட்டி, ஆங்கியம், சாலக்காடு, கவுண்டம்பாளையம், கீழப்பட்டி, வடக்குப்பட்டி, கோட்டபாளையம், வி.ஏ.சமுத்திரம், பி.மேட்டூர், கே.புதூர், மாராடி, கட்டப்புளி, சீதக்காடு, கருப்பம்பட்டி, புளியஞ்சோலை, விசுவை தெற்கு, வடக்கு, வலையப்பட்டி, நெட்டவேலம்பட்டி, பச்சபெருமாள்பட்டி, ரெட்டியாப்பட்டி, ஆலத்துடையான்பட்டி, சிறுநாவலூர் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை ஏற்படும்.

Categories

Tech |