Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு “இதை கொடுக்க கூடாது”…. வெளியான சூப்பர் உத்தரவு…..!!!!!

ரேசன் கடைகளில் தரையில் சிந்தும் பொருட்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யக்கூடாது என்று கூட்டுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கையில், “அரிசியின் தரத்தினை கிடங்குகளிலேயே சரி பார்த்து தரமான அரிசியை மட்டுமே ரேசன் கடைகளுக்கு அனுப்ப வேண்டும். ரேசன் கடைகளுக்கு அனுப்பப்பட்ட பின்னர் அது தரமற்ற அரிசியாக இருந்தால் ரேசன் கடை பணியாளர்கள் அவற்றை மீண்டும் கிடங்குகளுக்கு திருப்பி அனுப்பலாம்.

ரேசன் கடைகள் உட்புறமும், வெளிப்புறமும் தூய்மையாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் கீழே சிந்தாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். அவ்வாறு கீழே சிந்தும் அத்தியாவசிய பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு வினியோகம் செய்யக்கூடாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |