Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட தகராறு…. “மது போதையில் தீக்குளித்து தற்கொலை”…..!!!!!

பொன்னமராவதி அருகே குடும்ப தகராறு காரணமாக தீக்குளித்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொன்னமராவதி அருகே இருக்கும் கருமங்காடு பகுதியை சேர்ந்தவர் அழகப்பன்(25). இவரின் மனைவி நிரோஷா. இத்தம்பதியினருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றார்கள். அழகப்பன் ஈரோட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் சென்ற ஒரு மாத காலமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இதனால் நிரோஷா களை எடுக்கும் வேலைக்கு சென்றுள்ளார்.

ஆனால் அழகப்பன் நிரோஷாவை வேலைக்கு செல்ல வேண்டாம் என கூறியுள்ளார். இருப்பினும் நிரோஷா வேலைக்கு சென்றுள்ளார். இதனால் கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று ஆத்திரமடைந்த அழகப்பன் மது போதையில் வீட்டிலிருந்து மண்ணெண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்கள். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். தற்பொழுது போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Categories

Tech |