Categories
தேசிய செய்திகள்

தேசிய விருது பெற…. ஆகஸ்ட் 28ஆம் தேதிக்குள்…. மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தேசிய விருது பெற மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை செய்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கும் அமைச்சகம் சார்பாக ஒவ்வொரு வருடமும் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக தேசிய அளவில் சிறப்பாக சேவை செய்தவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது.

மொத்தம் 14 பிரிவுகளில் இந்த விருது வழங்கப்படுகிறது. விருது பெறுவோருக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் ஆகியவற்றுடன் ஒரு லட்சம், இரண்டு லட்சம் ரொக்கம் வழங்கப்படும். இந்த விருதுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் இது தொடர்பான விவரங்களை www.disabilityaffairs.gov.in என்ற இணையதள பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம் அல்லது www.awards.gov.inஎன்ற இணையதளத்திலும் நேரடியாக ஆகஸ்ட் 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |