ஊட்டி நகர் பகுதியில் புலி, கரடி நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளார்கள்.
நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் அடர்ந்த வனப்பகுதியை கொண்டுள்ள நிலையில் இங்கு புலி, சிறுத்தை, காட்டெருமை, காட்டு யானை, கரடி உள்ளிட்ட பல வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றது. சென்ற சில நாட்களாகவே வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் வெளியேறி குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து விடுகின்றது. மேலும் மனித விலங்கு இடையே மோதல் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்கள் ஏற்படுகின்றது. இந்நிலையில் எச்.பி.எப் பகுதியில் வளர்ப்பு எருமை மாடு ஒன்றை வனவிலங்கு வேட்டையாடி தின்றுவிட்டு மீதமுள்ள உடல் பாகங்களை குடியிருப்பில் உள்ள வனப்பகுதியில் விட்டுச் சென்றது. இதை அடுத்து தகவல் அறிந்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்கள்.
அப்போது பொதுமக்கள் புலி நடமாட்டம் இருப்பதாக புகார் தெரிவித்ததை தொடர்ந்து புலி இருப்பது தெரிய வந்தது. இதனால் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சமடைந்துள்ளார்கள். இது போலவே தீட்டுக்கள் பகுதியில் பால் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் புகுந்து கரடி சென்ற சில நாட்களாக அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றது. இது குறித்த தகவலின் பெயரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தார்கள். ஊட்டி நகர் பகுதியில் புலி, கரடி நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.