நடிகர் ரன்பீர் கபூர், நடிகை ஷ்ரத்தா கபூர் நடிப்பில் பெயரிடப்படாத இந்தி திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பு மும்பை சித்ரகூட் படப்பிடிப்பு தளத்தில் நடந்து வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று திடீரென இந்த தளத்தில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இந்த தீ விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் நடிகை ஷ்ரத்தா கபூர் சமீபத்தில் ஸ்பெயின் நாட்டில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டு விட்டு மும்பை திரும்பினர்.
அவர்கள் படிப்பிடிப்பில் கலந்து கொள்ள இருந்த நிலையில் தீ விபத்து சம்பவம் ஏற்பட்டு உள்ளது. நீண்டநேர போராட்டத்திற்கு பின்னர் தீயணைப்பு வீரர்கள் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.