Categories
சினிமா தமிழ் சினிமா

சந்தானம் நடிப்பில் வெளியாகியுள்ள “குலு குலு”…. படம் எப்படி இருக்கு…? இதோ திரைவிமர்சனம்….!!!!!

சந்தானம் நடிப்பில் வெளியாகியுள்ள குலு குலு திரைப்படத்தின் திரைவிமர்சனம்.

தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகின்றார் சந்தானம். இவர் முதலில் நகைச்சுவை நடிகராக நடித்து வந்த நிலையில் தற்போது கதாநாயகனாக நடித்த வருகின்றார். இந்நிலையில் தற்பொழுது இயக்குனர் ரத்தினகுமார் இயக்கத்தில் குலுகுலு திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ராஜனாராயணன் தயாரிக்க சந்தோஷ நாராயணன் இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படம் ஜூலை 29ஆம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்தப்படி படம் நேற்று வெளியானது. இத்திரைப்படத்தில் உதவியென யார் வந்து கேட்டாலும் சந்தானம் ஓடிப்போய் அவர்களுக்கு உதவுவார். அப்படி ஒரு நாள் சில இளைஞர்கள் தங்கள் நண்பனை காணவில்லை, அவரை கண்டுபிடித்து தருமாறு கேட்கின்றார்கள். ஆகையால் சந்தானம் அந்த காணாமல் போன நண்பரை கண்டுபிடிக்கின்றாரா? இல்லையா? என்பதே படத்தின் ஒரு வரி கதையாகும்.

இத்திரைப்படத்தில் சந்தானம் வழக்கத்திற்கு மாறாக சீரியஸான எமோஷனலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளது ரசிகர்களிடையே பாராட்டை பெற்றிருக்கின்றது. முதல் பாதியில் பாராட்டும் வகையில் இருந்தாலும் கதை சற்று மெதுவாக செல்கிறது. ஆனால் இடைவேளைக்குப் பிறகு கிளைமாக்ஸ் காட்சி வரை படம் விறுவிறுப்பாக நகர்வதால் அது குறையாக தெரியவில்லை. ஆக மொத்தத்தில் ரத்தினகுமார்- சந்தானம் கூட்டணி வெற்றி கூட்டணியாக அமைந்திருக்கின்றது.

Categories

Tech |