அஜித்தின் ஏகே 61 திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
வலிமை படத்திற்குப் பிறகு அஜித் மற்றும் எச். வினோத் இயக்கத்தில் மீண்டும் ஒரு படம் உருவாகி வருகிறது. வலிமை படத்தின் வெற்றியால் இருவரும் மீண்டும் இணையும் புதிய படம் தொடர்பான செய்திகள் ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி வருகின்றது. இந்த படத்திற்கு இன்னும் பெயரிடவில்லை. தற்காலிகமாக ஏகே 61 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ள நிலையில் அஜித் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்தது.
இந்த நிலையில் படம்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகின்றது. அஜித் படப்பிடிப்பிலிருந்து ஓய்வில் இருந்த நிலையில் அடுத்த வாரம் மீண்டும் படப்பிடிப்பில் இணைய இருக்கின்றார். ரசிகர்கள் தற்பொழுது படத்தின் அப்டேட்டை கேட்ட வண்ணம் இருக்கின்றார்கள். இந்த நிலையில் படம் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.
இத்திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது. இவர் கேஜிஎப் திரைப்படத்தில் வில்லனாக மிரட்டியிருந்தார். தற்பொழுது ஏகே 61 திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.