Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“ரூ.10 லட்சம் இருந்தால் அரசு வேலை”….. பட்டதாரிடம் ரூ.7 3/4 லட்சம் அபேஸ்…. போலீசார் அதிரடி….!!!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் தெற்கு காட்டில் ஸ்ரீ விஜய் என்பவர் வசித்து வருகிறார். பட்டதாரியான இவர் ஒரு நண்பர் மூலம் ராசிபுரத்தை சேர்ந்த ராஜ்மகேந்திரன் என்பவர் அறிமுகம் ஆனார். அப்போது ராஜ்மகேந்திரன் தனது தாய் கலைவாணி நாமக்கல் மாவட்ட அதிமுக மகளிர் அணியின் செயலாளராக இருப்பதாகவும், தந்தை சுப்பிரமணி பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் வேலை செய்து வருவதாகவும் கூறியுள்ளார். இதனை ஸ்ரீ விஜய் உண்மை என்று நம்பியுள்ளார். அதனை தொடர்ந்து தனது பெற்றோர் பலருக்கு அரசு வேலை வாங்கி கொடுத்ததாகவும், தற்போது சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அலுவலர் வேலை வாங்கி தருவதாகவும் ஸ்ரீ விஜயிடம் ராஜ் மகேந்திரன் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

இதற்காக ரூ.10 லட்சம் தர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து விஜய் கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 3 தவணையாக ரூ.7,75,000 ஆயிரம் கொடுத்து உள்ளார். ஆனால் ராஜ் மகேந்திரனின் குடும்பத்தினர் அரசு வேலை எதுவும் வாங்கி தரவில்லை. அதனால் கொடுத்த பணத்தை ஸ்ரீ விஜய் திருப்பி கேட்ட போது அவர்கள் தராமல் தொடர்ந்து ஏமாற்றி வந்துள்ளனர். இதனையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநமிடம் ஸ்ரீ விஜய் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் மோசடி குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. குற்றப்பிரிவு துணைபோலீஸ்ஸ் சூப்பிரண்டு இள முருகன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், அதிமுக பெண் நிர்வாகி கலைவாணி, அவரது கணவர் சுப்பிரமணி, மகன்கள் ராஜ் மகேந்திரன், விஜய் ஆனந்த் ஆகியோர் மீது கூட்டு சதி மோசடி உள்ளிட்ட 2 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |