Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இங்கு நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றணும்…. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!!

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் கார் மேகம் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) பாலய்யா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் செல்வமணி போன்றோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பலர் பங்கேற்று பல பிரச்சினைகளை பற்றியும், அதற்கு தீர்வு காண்பது குறித்தும் பேசினர். இக்கூட்டத்தில் விவசாயிகள் பேசியிருப்பதாவது “ஆத்தூர் தலைவாசல், கெங்கவல்லி உள்ளிட்ட பகுதிகளில் ஏரி, குளங்களுக்கு போகும் நீர்நிலை வழித்தடங்களை சிலர் ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர்.

இதன் காரணமாக விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதையடுத்து கூட மலையில் சுவேத நதியில் சீமை கருவேல மரங்கள் அதிகமாக இருப்பதால் அதை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கருப்பூரில் பனங்காட்டு ஏரி சுமார் 75 ஏக்கர் பரப்பளவில் அமைந்து உள்ளது. எனினும் இந்த ஏரிக்கு வரும் வழிப்பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பதால் தண்ணீர் வரத்து இன்றி விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளது. ஆகையால் ஏரியை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பெத்தநாயக்கன் பாளையம் வட்டாரம் கொட்டவாடி வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் பொக்லைன் எந்திரம் விவசாய பயன்பாட்டுக்கு வாடகைக்கு கொடுப்பதில்லை.

எனவே விவசாயத்திற்கு முன்னுரிமை அளித்துவிட்டு வேறு நபர்களுக்கு பொக்லைன் எந்திரம் வழங்கவேண்டும். வேளாண்மை உள்ளிட்ட அரசுதுறை அலுவலகங்களில் துறை சார்ந்த திட்டங்கள், மானியம் உள்ளிட்ட விபரங்களை பொதுமக்கள் பார்த்து தெரிந்துகொள்ளும் அடிப்படையில் எழுதிவைக்க வேண்டும்” என்று விவசாயிகள் பேசினர். இதற்கு பதிலளித்து கலெக்டர் கார்மேகம் பேசியதாவது, ஏரி, குளங்களிலுள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அதை உடனே அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அரசு அலுவலகம் சுவர்களில் துறை சார்ந்த திட்டங்கள் குறித்து பொதுமக்கள் எளிதில் தெரிந்துகொள்ளும் வகையில் எழுதிவைக்க வேண்டும். அதற்கு மாற்றாக அரசு அலுவலக சுவரில் சினிமா போஸ்டர்கள், விளம்பரங்கள் இருந்தால் அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கண்காணித்து உடனடியாக அகற்ற வேண்டும் என்றார்.

Categories

Tech |