Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இன்றைய(09.02.2020)நாள் எப்படி இருக்கு ?பலன் இதோ..!!

மேஷம் ராசி அன்பர்களே: 

இன்று  உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து தீரும் . இன்று குடும்பத்தில் நிம்மதி மற்றும் சந்தோஷம் குறையக்கூடம்  . சகோதர  வழியாக மன சங்கடங்கள் ஏற்படும் . தொழிலில் பணியாளர்களை  அனுசரித்து சென்றால் முன்னேற்றத்தை காணலாம். ஆன்மீக  வழிபாடு நன்மை தரும்.

ரிஷபம் ராசி அன்பர்களே:

இன்று நீங்கள் புது உற்சாகத்துடனும்,பொலிவுடனும் காணப்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த  அனைத்து உதவிகளும்  கிடைக்கும். சகோதரர்கள்   உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள். தொழில்  வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். சுபகாரியங்கள் அனைத்தும்  கைகூடும்.

மிதுனம்ராசி அன்பர்களே: 

இன்று உங்களுக்கு பணவரவு குறைவாக தன இருக்கும். பிள்ளைகள் வழியில் வீண்  செலவுகள் உண்டாகும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள்  ஓரளவு சாதகமாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் வீண் பண செலவுகள்  உண்டாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை அனுசரித்து சென்றால் லாபகரமான பலனை அடையலாம்.

கடகம் ராசி அன்பர்களே: 

இன்று நீங்கள் எந்த செயலையும்  தைரியத்தோடும் பலத்த்தோடும் செய்து முடிப்பீர்கள். உங்களின்  முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் நல் ஆதரவு கிடைக்கும். நண்பர்களால்  அனுகூலம் உண்டாகும் . சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும் . சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள்  அனைத்தும் விலகும்.

சிம்மம்ராசி அன்பர்களே: 

இன்று உங்களுக்கு விரைவில்  முடிய வேண்டிய காரியம் கூட காலதாமதமாகும். தேவையற்ற  செலவுகளால் கையிருப்பு வீணாகும் . பணபற்றாக்குறை சமாளிக்க சிக்கனமுடன் செயல்பட வேண்டி இருக்கும் .  பெரியவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் பல புதிய மாற்றங்கள்உண்டாக கூடும் .

கன்னிராசி அன்பர்களே: 

இன்று உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாக கூடும் . சொந்தங்களின்  அனுகூலம் கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும் . குழந்தைகள்  பொறுப்புடன் செயல்படுவார்கள். ஆன்மீக  காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக காணப்படும் . வீட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

துலாம்ராசி அன்பர்களே: 

இன்று உங்கள் குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி உண்டாகும் . பெற்றோர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும் . உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் . நவீனகரமான பொருட்கள் வாங்க நல்ல நாளாக இருக்கும் . உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனுகூலமாக இருப்பார்கள். நினைத்தது நடக்கும் நாளாக இருக்கும் .

விருச்சிகம்ராசி அன்பர்களே: 

இன்றுஉங்கள்  குடும்பத்தில் பெண்களுக்கு பணிச்சுமை கூடும் . தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல் மற்றும் டென்ஷன்கூடும்  . கையிருப்பு  அனைத்தும் குறையும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது மிக நல்லது. எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவி கிடைக்கும் . மன நிம்மதி உண்டாகும் .

தனுசு ராசி அன்பர்களே; 

இன்று நீங்கள் மன தெளிவு இன்றி காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை ஏற்படும் .தனுசு ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது மிகவும்  நல்லது. மற்றவர்களிடம் கடன் வாங்குவதையோ அல்லது கடன் கொடுப்பதையோ தவிர்ப்பது மிகவும் நல்லது.

மகரம் ராசி அன்பர்களே: 

இன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். இதுவரை இருந்த கடன் பிரச்சினைகள் தீரும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார ரீதியாக வெளிவட்டார நட்பு கிட்டும்.

கும்பம்ராசி அன்பர்களே :

இன்று நண்பர்களின்  வருகையால் வீட்டில்  இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பாலிய  நண்பர்களின் சந்திப்பால் மன மகிழச்சி கூடும் . தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும் . உடன் பிறந்தவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் அனைத்தும்  நீங்கும். வீட்டில் புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

மீனம்ராசி அன்பர்களே: 

இன்று வியாபாரம்  ரீதியாக பொருளாதார நிலை சற்று குறைவாக  இருக்கும். குடும்பத்தில் சிறு சிறு பிரிவுகள்  ஏற்படலாம். திருமணம் சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில் பொறுமை  தேவை. உடல் ஆரோக்கியம் நல்ல படியாக இருக்கும். விலை உயர்ந்த ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள்.

Categories

Tech |