Categories
மாநில செய்திகள்

ஆகஸ்ட் 13, 14, 15 தேதிகளில்….. சென்னை மக்களுக்கு மேயர் முக்கிய வேண்டுகோள்…..!!!!!

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள அனைத்து வீடுகளிலும் மூன்று நாட்களுக்கு தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார். மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள், மண்டல அலுவலர்கள், வியாபார சங்கப் பிரதிநிதிகள் உடன் மேயர் பிரியா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அவர், பொதுமக்களிடம் இதுகுறித்து விழிப்புணர் ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்..

மேலும் பிளாஸ்டிக் தேசிய கொடிகளை முற்றிலும் தவிர்க்கும் படியும் கேட்டுக் கொண்டுள்ளார். ஆகஸ்ட் 13, 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் கொடியேற்றவும் அவர் வலியுறுத்தியுள்ளார். அனைத்து வார்டு கவுன்சிலர்களும், குடியிருப்பு நலச் சங்கங்களும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் கொடியை ஏற்பாடு செய்து மக்களுக்கு தரவேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.

Categories

Tech |