விழுப்புரம் அருகே வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து இருக்கின்றனர். இதுபோன்ற தற்கொலை மரணங்களை தடுக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வி நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Categories