மீனம் ராசி அன்பர்களே, இன்று வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாளாகவே இருக்கும். ஏட்டிக்குப், போட்டியாக பேசியவர்கள் உங்களைவிட்டு விலகிச்செல்வார்கள். இன்று இணக்கமான சூழ்நிலையை காணப்படும். உடன்பிறப்புகள் வகையில் ஒத்துழைப்பு ஏற்படும்.
குடும்பத்தில் இருந்த குழப்பமான நிலை மாறும். இன்று உத்தியோகஸ்தர்கள் அலுவலக பொறுப்புகளை கவனமாக செய்வது நல்லது. எந்திரங்களில் பணிபுரிபவர்கள், ஆயுதங்களை கையாளுபவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இன்று கூடுமானவரை நிதானத்தை மேற்கொள்ளுங்கள்.
பொறுமையாக நடந்து கொள்ளுங்கள். கொடுக்கல், வாங்கல்களில் கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று தயவு செய்து கடன் வாங்க வேண்டாம். அது மட்டுமில்லாமல் இன்று வெளியூர் பயணம் மேற்கொள்ளும் பொழுது பொருட்களின் மீது கவனமாக இருங்கள். தூங்காமல் செல்வது ரொம்ப சிறப்பு.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல்இன்று சிவபெருமான் வழிபாட்டையும், சூரிய நமஸ்கார வழிபாட்டையும் மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்