வயிற்று வலி காரணமாக பிளஸ் ஒன் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள மிட்டாநூல அள்ளி இன்னும் பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பூரண பிரதாஷ்(17). இவன் ஏலகிரி அருகே தனது பாட்டி வீட்டில் தங்கி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வருகின்றார். இந்தநிலையில் மாணவனுக்கு அடிக்கடி வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகின்றது. இதற்காக அவன் மருத்துவ சிகிச்சையில் பெற்றும் குணமாகவில்லை.
இந்த சூழலில் நேற்று முன்தினம் இரவு மாணவனுக்கு வயிறு வலி ஏற்பட்டிருக்கிறது. இதனால் மணமுடைந்த மாணவன் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான். இது பற்றி அதியமான் கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பெயரில் போலீசார் விரைந்து வந்து மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பற்றி அதியமான் கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.