Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…வேலைப்பளு கொஞ்சம் குறையும்.. பொறுமையை கையாளுங்கள்..!!

தனுசு ராசி அன்பர்களே, இன்று பொறுப்புகள் கூடும் நாளாகவே இருக்கும். அடுத்தவரை நம்பி எந்தவித வேலையையும் ஒப்படைக்காதீர்கள், பொறுப்புகளையும் கொடுக்காதீர்கள். நீங்கள் முயற்சிகளை மேற்கொண்டு செய்வதுதான் மிகவும் சிறப்பு. இன்று  தந்தை வழி உறவில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும்.

வேலைப்பளு கொஞ்சம் குறையும். பணப்பற்றாக்குறை நிவர்த்தி ஆகும். இன்று  எதையும் செய்யும் முன்பு திட்டமிட்டு அதன்படி செய்வது அவசியம். பயணங்கள் செல்லும் பொழுது கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. இன்று மெத்தனமான போக்கு காணப்படும், பார்த்துக்கொள்ளுங்கள். இன்று  பொறுமையை கையாளுங்கள், பண பரிவர்த்தனையில் ரொம்ப கவனமாக இருங்கள்.

ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். இன்று  முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து  கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று  சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் சேர்த்து வழிபடுங்கள், உங்களுடைய வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் நீளம் நிறம்

Categories

Tech |