அமெரிக்க நாட்டின் பூங்காவில் ரோப் காரிலிருந்து குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க நாட்டின் டென்னிசி என்னும் மாகாணத்தில் அமைந்திருக்கும் பொழுதுபோக்கு பூங்காவில் ரோப் கார் வசதி இருக்கிறது. அதில் ஏறி பயணிகள் பூங்காவை சுற்றி பார்க்கலாம். இந்நிலையில் நேற்று அந்த ரோப் காரில் பயணித்த இளம் பெண் ஒருவர் 40 அடி உயரத்தில் கார் சென்ற போது திடீரென்று பாதுகாப்பு கம்பிகளிலிருந்து விடுபட்டு கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் அங்கிருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக, பூங்கா நிர்வாகம் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.