அவ்வபோது சில சர்ச்சைகளில் சேர்க்கும் மடம் என்று சொன்னால் அது மதுரை ஆதீனம். சமீப காலமாக அரசியல் களங்களில் ஆதீனங்களின் கருத்து பெரும் பங்கு வகித்து வருகிறது. தமிழ் வேத ஆகம பயிற்சி நிறைவு விழா என்று சிவகங்கை மாவட்டத்தின் திருப்பத்தூரில் நடைபெற்றுள்ளது. அந்த விழாவில் மதுரை ஆதீனம் கலந்து கொண்டு பேசியுள்ளார்.
தமிழர் வீடுகளில் கூட தமிழில் பூஜை நடப்பதில்லை என தெரிவித்துள்ளார். அந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய மதுரை ஆதீனம் தமிழ் தமிழ் என்று பேசுகின்றவர்கள் வீடுகளில் கூட தமிழில் பூஜை நடைபெறுவதில்லை. தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று ஒரு கூட்டமும் தமிழில் அர்ச்சனை செய்யக்கூடாது என மற்றொரு கூட்டமும் பேசி வருகின்றது. மேலும் அவரவர்களுக்கு விருப்பப்பட்ட மொழிகளில் பூஜை செய்யட்டும். ஆனால் தமிழில் பூஜை செய்வதை யாரும் தடுக்க கூடாது தமிழர்கள் மொழி உணர்வுடன் வாழ வேண்டும் நாம் பெண்மையை போற்ற வேண்டும் என மதுரை ஆதீனம் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.