Categories
தேசிய செய்திகள்

DA உயர்வு: அதிகரிக்க போகும் அலோவன்ஸ்கள்?…. எதிர்பார்ப்பில் மத்திய அரசு ஊழியர்கள்….!!!!

மத்திய அரசு ஊழியர்கள் 2022 ஆம் வருடத்துக்கான உயர்த்தப்பட்ட அகவிலைப்படியைப் பெறுவதற்கு நீண்டகாலமாக ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். அதிலும் குறிப்பாக ஜூலைமாத அமர்வில் இந்த DA உயர்வு கிடைக்கும். இந்த DA உயர்வின் வாயிலாக பிஎப், பணிக்கொடைத் தொகை, டிராவல் அலோவன்ஸ், ஹெச்ஆர்ஏ அலோவன்ஸ் ஆகியவை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஊழியர்களுக்கான DA % 34ல் இருந்து 38 சதவீதமாக அதிகரிக்கப்படலாம் என கூறப்படுகிறது. அதே நேரம் ஊழியர்களுக்கான DA% குறைந்தபட்சம் 4 சதவீதம் உயர்த்தப்படலாம் என ஏஐசிபி இன்டெக்ஸ் தெரிவித்து உள்ளது.

அரசு எப்போது  DA உயர்வையும், 18 மாதம் நிலுவை ஊதியமும் குறித்த செய்தியை வெளியிடும் என அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். மே மாதத்துக்கான சமீபத்திய அகில இந்திய CPI-IW தரவுகளின் அடிப்படையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சிகரமான ஒரு நல்ல செய்தியை வழங்கப் போவதாக கூறப்படுகிறது.  சில தகவல்களின் படி DA அளவை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படும் பிற 4 அலோவன்ஸ்களும் அதிகரிக்கலாம் என கருதப்படுகிறது. DA உயர்வுடன் இந்த அலோவன்ஸ்களும் சேர்த்து உயர்த்தப்பட்டால், அது அரசு ஊழியர்களுக்கு சந்தேகமின்றி எண்ணிலடங்கா மகிழ்ச்சியை கொடுக்கும்.

அத்துடன் DA உயர்த்தப்பட்டால் மத்திய அரசு ஊழியர்களின் மாதாந்திர வருங்கால வைப்புநிதியும் (பிஎஃப்) உயர்த்தப்படும். மத்திய அரசு ஊழியர்களுக்கான உயர்வு சதவீதத்தை தீர்மானிப்பதில் முக்கியமான காரணியாக ஏஐசிபி இன்டெக்ஸ் இயங்கி வருகிறது. இது மத்திய அரசின் மே மாதத்துக்கான DA அதிகரிப்பதற்கான நிகழ்தகவை சுட்டிக் காட்டுகிறது. அதனை தொடர்ந்து ஊடகங்களில் DA உயர்வு, 18 மாத நிலுவைதொகை குறித்து செய்திகள் வெளியாகி ஊழியர்களின் ஆவலை அதிகப்படுத்தி வரும் சூழ்நிலையில், இது தொடர்பாக அரசாங்கம் எந்த வித அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |