Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பெற்றோர் கொலை – மகனின் வெறிச்செயல்

கோவை மாவட்டம் பேரூர் அருகே மது அருந்த பணம் தராத தந்தை தாயை பெற்ற மகனே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திரா வீதியை சேர்ந்தவர் சுந்தரம் அவர் மனைவி துளசி இவர்களுக்கு நான்கு மகனள்களும் கார்த்திகேயன் என்ற ஒரு மகனும் உள்ளனர். கார்த்திகேயன் கூலி வேலை செய்து வருகிறார் குடிப்பழக்கத்திற்கு அடிமையான கார்த்திகேயன் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்து வந்துள்ளார்.

இதனை பொறுத்துக் கொள்ள இயலாத கார்த்திகேயன் மனைவி தனது மகனுடன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார் அதன் பிறகு ஐந்து வருடங்களாக பெற்றோருடன் வசித்து வரும் கார்த்திகேயன் நேற்றைய முன்தினம் குடிபோதையில் வந்து வீட்டில் தகராறு செய்துள்ளார்.

தகராறில் கோபம் கொண்ட கார்த்திகேயன் அரிவாளால் தாயின் காலில் வெட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதனால் ஆத்திரம் கொண்ட சுந்தரம் மகன் மீது ஆலந்துறை காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். பின்னர் மனம் மாறிய சுந்தரம் மகன் மீது கொடுத்த புகாரை வாபஸ் வாங்கியுள்ளார்.

நேற்று இரவு 9 மணி அளவில் சுந்தரமும் துளசியின் வீட்டில் இருந்து உள்ளனர்  அப்போது மது அருந்திவிட்டு போதையில் வீட்டிற்கு வந்த கார்த்திகேயன் பெற்றோரிடம் மது அருந்த பணம் கேட்டு உள்ளார்.  பணம் கொடுக்க மறுத்து சுந்தரம் மற்றும் துளசியிடம் மேலும் சண்டை பிடித்துள்ளார் கார்த்திகேயன். தகராறு முடிவடைந்த பின்னர் சுந்தரமும் துளசியும் தூங்க சென்றுவிட்டனர். கார்த்திகேயனும் தூங்கிவிட்டார்

இன்று அதிகாலை கார்த்திகேயன் மது அருந்த பணம் கொடுக்காத பெற்றோரை கொலை செய்ய முடிவு செய்து தந்தை சுதந்திரத்தையும் தாய்  துளசியையும் அரிவாளால் சராமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார். பின்னர் வீட்டின் கதவை சாத்திவிட்டு தப்பி சென்றுள்ளார்.

வெகு நேரமாகியும் வீட்டின் கதவு திறக்கப்படாததால் அக்கம்பக்கத்தினர் சந்தேகம் கொண்ட வீட்டின் கதவைத் தட்டி பார்த்துள்ளனர். அப்பொழுது சுந்தரமும் துளசியும் கொலைசெய்யப்பட்டு இருந்ததை பார்த்து காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அதனை தொடர்ந்து காவல்துறையினர் தனிபடை அமைத்து கார்த்திகேயனை தேடி வருகின்றனர்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |