திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே ஆண்கள் மட்டும் பங்கேற்கும் விநோத திருவிழா நடைபெற்றது. விராலிப்பட்டி கோட்டை கருப்பண சாமி கோயிலில் நடந்த ஆடித் திருவிழாவில் காலை முதல் மாலை வரை பெண்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சாமி தரிசனம் செய்யலாம். ஆனால், நைட் பத்து மணிக்கு மேல் பெண்களுக்கு அனுமதியில்லை. நள்ளிரவில் நடக்கும் விநோத திருவிழாவில் 3000க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.
ஆடுகள், சேவல்கள் ஒரே நேரத்தில் பலியிடப்பட்டு அனைத்து மொத்தமாக சமைக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. ஆனால் ஆண் பக்தர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. இந்த விழாவில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.