Categories
தேசிய செய்திகள்

பாலக்காடு -ஈரோடு மெமு பயணிகள் ரயில் மீண்டும் இயக்கம்…. ரயில் பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்….!!!!

கொரோனா காரணமாக தமிழகத்தில் பல்வேறு வழித்தடங்களில் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தது. அவ்வகையில் பாலக்காட்டில் இருந்து கோவை வழித்தடத்தில் ஈரோட்டுக்கு இயக்கப்பட்டு வந்த மெமு இரயில் சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் பாலக்காடு,கோவை மற்றும் திருப்பூரில் இருந்து பணிக்கு செல்வோர் கல்லூரி மாணவ மாணவிகளின் வசதிக்காக இந்த ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

இதனைத் தொடர்ந்து பாலக்காடு மற்றும் ஈரோடு மெமு ரயில் இன்று முதல் மீண்டும் தனது சேவையை தொடங்கியது. வழக்கம் போல இந்த ரயில் அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரயில் பயணிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |