Categories
தேசிய செய்திகள்

30 வருடத்திற்கு முன் இறந்தவர்களுக்கு….. ஆச்சரியமூட்டும் வகையில் திருமணம்…. வைரலாகும் வீடியோ….!!!!!!!!

கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சில சமுதாயத்தை சேர்ந்த மக்கள் இந்த ஆத்மா திருமணத்தை ஒரு சடங்காக பின்பற்றி வருகின்றார்கள். தட்சிணா கனடா மாவட்டத்தில் இறந்தவர்களுக்கு திருமண நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. 30 வருடங்களுக்கு முன் இறந்துபோன இரு குழந்தைகளுக்கு தான் இந்த ஆத்மா திருமணம் நடைபெற்றுள்ளது. சிறுவயதிலோ அல்லது இளமைக்காலத்திலோ அல்லது திருமணம் செய்யாமல் யாராவது இறந்திருந்தால் அவர்களுக்கு இது போன்ற திருமணம் நடத்தப்படுகிறது. திருமணம் செய்து வைத்து ஆத்மாக்களை மோட்சம் அடைய இந்த சடங்கை பின்பற்றி வருவதுதான் இந்த பிரேத திருமணமாகும்.

 

 

நிஜ திருமணம் எவ்வாறு நடைபெறுகின்றதோ அதேபோல் இந்த பிரேத திருமணங்களும் நடைபெறுகின்றது. இரு இருக்கைகள் போடப்பட்டு அதில் மணமகன் மணமகளின் துணிமணிகளை வைத்து சில திருமண சடங்குகள் செய்யப்படுகிறது. மேலும் இந்த திருமணத்தில் போடப்பட்ட இருக்கைகளில் மணமகளும் மணமகனும் (அவர்களது ஆடைகளுடன் உறவினர்கள்) ஏழு முறை சுற்றி வருவது வழக்கம். இந்த திருமண விருந்தில் மீன் வருவல், சிக்கன் சுக்கா, மட்டன் கிரேவி, இட்லி போன்றவை பரிமாறப்பட்டுள்ளது. மேலும் இந்த வீடியோக்களை பார்த்து பலர் ஆச்சரியப்பட்டு இருக்கின்றனர். அதனை அன்னி  அருண் என்பவர் தனது ட்வீட்டர்  பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அருண் ஜூலை 28-ம் தேதி அன்று இந்த திருமணத்தில் கலந்து கொண்டதாகவும் ஒரு வித்தியாசமான காரணத்திற்காக அதைப் பற்றி எழுதுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |