Categories
மாநில செய்திகள்

தன் பங்குக்கு ஆளை இறக்கிய OPS… தேர்தல் ஆணையத்தின் முடிவு என்ன?… வெளியான பரபரப்பு தகவல்…!!!!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி ஆலோசனை நடத்தப்பட உள்ளது. அன்று தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹீ தலைமையிலும், மாவட்டங்களில் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தலைமையிலும் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் தனித்தனியாக செயல்பட்டு வருகின்ற நிலையில் தலைமை தேர்தல் அதிகாரி நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் அதிமுக சார்பில் பங்கேற்பாவது யார் என்ற கேள்வி எழுந்தது.

அதற்கு அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் காட்சிகளை அலுவலகங்களுக்கும் தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியது. அதிமுக அலுவலகம் எடப்பாடி பழனிச்சாமி வசம் உள்ளதால் அவர்களது தரப்பே ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.மேலும் பொள்ளாச்சி ஜெயராமன், இன்ப துரை கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் “அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் அதிமுக சார்பில் கோவை செல்வராஜ் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே எடப்பாடி பழனிச்சாமி தரப்பும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் தங்கள் ஆதரவாளர்களை அனுப்ப தயாராகும் உள்ள நிலையில் தேர்தல் ஆணையம் என்ன முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |