தமிழ் சினிமா திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ஏ ஆர் முருகதாஸ். இவர் ரஜினி, அஜித், விஜய், சூர்யா என டாப் நடிகர்களை வைத்து பல ஹிட் படங்களை கொடுத்திருக்கின்றார். கடைசியாக அவரது இயக்கத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு தர்பார் திரைப்படம் வெளியாகி உள்ளது. அதன் பிறகு விஜயின் 66வது படத்தில் ஏ ஆர் முருகதாஸ் இயக்குனர் என தகவல்கள் வெளியானது. ஆனால் தனது 66வது படத்தை இயக்கும் வாய்ப்பை தெலுங்கு இயக்குனர் ஒருவருக்கு கொடுத்தார் விஜய். இதனால் கடந்த இரண்டு வருடங்களாக எந்த படத்தையும் இயக்காமல் இருக்கிறார் ஏ ஆர் முருகதாஸ்.
இந்த சூழலில் ஏ ஆர் முருகதாஸ் நடிகர் சிம்புவிற்கு கதை கூறியதாகவும் கதையை கேட்டு இம்ப்ரஸ் ஆன சிம்பு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறப்பட்டு வருகிறது. இந்த புதிய கூட்டணி பற்றி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நடிகர் சிம்பு தற்போது பத்து தல படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் வெந்து தணிந்து காடு திரைப்படம் ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. இதற்கிடையே கடந்த வருடம் அறிவிக்கப்பட்ட கொரோனா குமார் திரைப்படம் அறிவிக்குப்பின் எந்த அப்டேட்டும் இல்லாமல் அப்படியே இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.