இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் கோவை ஆட்டோ ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் தேசிய அளவிலான 4 சக்கர வாகனங்களுக்கு ‘ப்ளூ பேண்ட் தேசிய சாம்பியன்ஸ் 2022’ போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிக்கான முதல் சுற்று கடந்த ஏப்ரல் மாதம் சென்னையில் நடைபெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் இரண்டாம் சுற்று தற்போது கோவை எல்என்டி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள மணல் தடம் கொண்ட பாதையில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சாம்பியன்ஷிப் மற்றும் சேலஞ்ச் பிரிவுகளில் பங்கேற்றக் கார்கள் 27 கி.மீ. மணல் பாதையில் சீரிப்பாய்ந்தது.
இந்த போட்டியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 50க்கும் மேற்பட்ட வீரர்கள் கார்களுடன் பங்கேற்றனர். இந்த போட்டியில் கலந்து கொண்ட கார்கள் அனைத்து அசத்தலான வண்ணங்களில் ரேஸ்கார்களுக்கு உண்டான மிடுகுடுடன் காட்சியளித்தது. இந்த போட்டியில் கார்கள் சீறி பாயும் போது அதன் பின்னால் மணல் புழுதி புயல் போல் தொடர்ந்து கண்களை கவர்ந்தது. மேலும் போட்டியில் பங்கேற்றி இருந்த வீரர்கள் அவர்களது கார்களை வேகமாக அந்த இடமே அதிரும் அளவிற்கு ஓட்டினர். இந்த போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளும் கோப்புகளும் வழங்கப்பட்டது.