Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

40 நாட்களுக்கு முன் உயிரிழந்த பெண்…. போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!

உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் 40 நாட்களுக்கு பிறகு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம்  பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பட்டக்காரன் கொட்டாய் பகுதியில் சத்யபிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிறைமாத கர்ப்பிணியான பரமேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 19-ஆம் தேதி பரமேஸ்வரி பிரசவத்திற்காக ஏரியூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் பரமேஸ்வரிக்கு திடீரென ரத்தப்போக்கு ஏற்பட்டதால் அவரை  மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அழிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பரமேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் மருத்துவர்கள் சரியாக சிகிச்சை அளிக்காததால் தான் பரமேஸ்வரி இறந்ததாக கூறி மருத்துவர்களிடம் வாக்குவாதம் செய்தனர். இது குறித்து தகவல் இருந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து கலந்து சென்றனர். இந்நிலையில் பரமேஸ்வரி உயிரிழந்து 40 நாட்கள் மேல் ஆகியும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பரமேஸ்வரியின் உறவினர்கள் நேற்று எரியூர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் எம். எல். ஏ. ஜி.கே. மணி  உள்ளிடோர்  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பரமேஸ்வரியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து பரமேஸ்வரியின்  உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து  சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |