Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

வாக்காளர் அட்டை ஒப்படைப்பு போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…. பின் நடந்த சம்பவம்….!!!!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா லெப்பைக்குடிகாடு மக்களுக்கு திமுக. தலைமையிலான தமிழக அரசு தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை மீறி வறண்ட வெள்ளாறுபடுகையில் வேப்பூர் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு பணிகளை தொடர்ந்தது. இதனால் அதை கண்டிக்கும் வகையிலும் எதிர் வரும் தேர்தலை புறக்கணிக்கும் வகையிலும் வாக்காளர் அடையாளஅட்டையை லெப்பைக் குடிகாடு வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டமானது நடத்தப்படும் என நீர்ஆதார பாதுகாப்பு குழு எனும் அமைப்பை சேர்ந்தவர்கள் முன்னதாகவே அறிவித்து இருந்தனர். அந்த வகையில் நேற்று அந்த அமைப்பை சேர்ந்தவர்களும், பொதுமக்களில் சில பேரும் தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டையுடன் லெப்பைக்குடிகாடு கிராம நிர்வாக அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்பின் அவர்கள் வாக்காளர் அடையாளஅட்டையை லெப்பைக் குடிகாடு வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் ஒப்படைக்க சென்றனர். இந்நிலையில் அங்கு வருவாய் ஆய்வாளர் இல்லாததால் அவர்கள் மீண்டுமாக கிராம நிர்வாக அலுவலகம் முன் வந்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அவர்கள் லெப்பைக்குடிகாடு பாலத்துக்கு வந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக தகவலறிந்த குன்னம் தாசில்தார் அனிதா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் மகாலிங்கம் போன்றோர் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். பின் அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Categories

Tech |