கனடாவில் ஏராளமான கனேடியர்கள் பணி ஓய்வு பெறுகின்ற நிலையில் அதிக புலம்பெயர்வர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து புலம்பெயர்தல் அமைச்சரான Sean Fraser கூறியது, நமது சமுதாயங்களுக்கு உதவக்கூடிய வகையில் நாம் தொடர்ந்து வரலாறு காணாத அளவிலான புலம்பெயர்ந்தவோரை வரவேற்க இருக்கிறோம். இந்நிலையில் கனடாவில் 10 நகரங்களில் எக்ஸ்பிரஸ் நுழைவுத் திட்டத்தின் கீழ் அதிக அளவில் பணியிடங்கள் காலியாக உள்ளது. அதாவது, பிரான்ட்போர்ட் , Ottawa, கெலோனா, கியூபெக், கால்கரி, சாஸ்கட்டூன், அபார்ட்ஸ்போர்ட், ஹாலிஃபாக்ஸ், விக்டோரியா மற்றும் ரொரன்றோ ஆகிய நகரங்களில் அதிக பணியிடங்கள் காலியாக உள்ளன.
அதனைத்தொடர்ந்து பெடரல் திறன்மிகுப் பணியாளர்கள் திட்டம், பெடரல் திறன்மிகு வர்த்தக திட்டம் மற்றும் கனடா அனுபவ வகுப்பு ஆகிய மூன்று திட்டங்களும்தான் கனடாவில் பொருளாதாரப் புலம்பெயர்வோர் பணிக்கு விண்ணப்பிக்கப் பொருத்தமான திட்டங்கள் ஆகும். இதனையடுத்து தொழில்துறை, எலக்ட்ரிக்கல் மற்றும் கட்டுமானத்துறைகள், பராமரிப்பு மற்றும் உபகரணங்கள் பயன்பாட்டு வர்த்தகம், இயற்கை வளங்களில் தொழில்நுட்பப் பணிகள், விவசாயம் மற்றும் அது தொடர்பான உற்பத்தி, பதப்படுத்தல், தயாரிப்பு மற்றும் பயன்பாட்டு மேற்பார்வையாளர்கள் மற்றும் மத்திய கட்டுப்பாட்டு ஆபரேட்டர்கள் ஆகிய பணிகள் அதிகம் காலியாக உள்ளன.மேலும் உணவுக்கலை நிபுணர்கள், சமையல்காரர்கள் மற்றும் கேக் தயாரிப்போர் முதலான பணியிடங்களும் காலியாக உள்ளன.