Categories
சினிமா தமிழ் சினிமா

“சுட்டு போட்டாலும் நடிப்பு வரல”…. “தி லெஜண்ட்” படத்தை கடுமையாக விமர்சித்த ப்ளூ சட்டை…..!!!!

சரவணன் நடிப்பில் வெளியான திரைப்படத்தை விமர்சனம் செய்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

ஜேடி- ஜெர்ரி இயக்கத்தில் சரவணன் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தி லெஜெண்ட். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாகி உள்ளது.  இத்திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இப்படமானது தமிழகம் எங்கும் உள்ள 200க்கும் அதிகமான திரையரங்கில் சென்ற 28-ம் தேதி வெளியாகி உள்ளது. கதாநாயகியாக ஊர்வசி ரவுத்தலா நடித்துள்ளார். இத்திரைப்படம் வெளியானதிலிருந்து இணையத்தில் பலரும் விமர்சித்து வந்த நிலையில் ப்ளூ சட்டை மாறனும் விமர்சித்துள்ளார்.

அவர் நல்ல திரைப்படங்களையே கடுமையாக விமர்சனம் செய்வார். இந்நிலையில் இத்திரைப்படத்தை சும்மா விடுவாரா. தனது பாணியில் கடுமையாக விமர்ச்சித்துள்ளார். அவர் விமர்சித்தாவது, படத்துல ஹீரோவுக்கு சுட்டு போட்டாலும் நடிப்பு வரவில்லை. இது தெரிஞ்சாலும் அவரை மாற்ற முடியாது. காரணம் அவர்தான் தயாரிப்பாளர். படம் முழுக்க ரோபோ மாதிரியே வராரு. விளம்பர பட இயக்குனர்கள் ஜேடி-ஜெர்ரி இந்த படத்தையும் ஒரு விளம்பரம் மாதிரியே எடுத்திருக்கின்றார்கள்.

வலுவான திரைக்கதையும் இல்லாமல் லட்ச படத்துல வந்த சீன் மாதிரி எடுத்திருக்கின்றார்கள். 50 வயசுக்கு மேல இருக்கிற நண்பர்கள் சந்திச்சா சுகர பற்றி பேசுவாங்க. இந்த மாதிரி அண்ணாச்சி கூட சுகரை பற்றி பேசும்பொழுது அதையே கதையா வெச்சி படம் எடுபோம் என்று பண்ணியிருக்காங்க. தமிழ்நாட்டுல சுகர் வந்தவன் மட்டும் இத்திரைப்படத்தை பார்த்தால் ஒரு 200 நாள் கூட ஓடாதா. அண்ணாச்சி வச்சி சுகர் படம் எடுக்கிறோம் என்று சொல்லி படம் பார்த்தவனுக்கு எல்லாம் டிபி வந்தது தான் மிச்சம் என தனது பாணியில் விமர்சித்துள்ளார்.

Categories

Tech |