Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சாலை ஓரத்தில் சிம்கார்டு விற்பனை செய்யக்கூடாது…. புகார் அளித்த மாவட்ட செல்போன் ரீடெய்லர் சங்கத்தினர்….!!!!!

மாவட்ட செல்போன் ரீடெய்லர் சங்கத்தினர் புகார்  மனு ஒன்று அளித்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு  அலுவலகத்தில் மொபைல் போன் ரீடெய்லர் சங்கத்தினர் சார்பில் மனு ஒன்று அளிக்கப்பட்டது. அந்த மனுவில் நமது மாவட்டத்தில் சாலை ஓரங்களில் 3  சிம் கார்டு நிறுவனத்தினர் குடை அமைத்து குறைந்த விலையிலும், இலவசமாகவும் சிம்கார்டு விற்பனை செய்து வருகின்றனர். இந்த சிம் கார்டுகளை வாங்குபவர்கள் 1  மாதம் மட்டுமே பயன்படுத்திவிட்டு அதனை தூக்கி வீசி விடுகின்றனர்.

இதனையடுத்து வேறு சிலர் அந்த சிம் கார்டுகளை  எடுத்து தவறான முறையில் பயன்படுத்துவதற்கு அதிக அளவில் வாய்ப்புகள் உள்ளது.  மேலும் சாலை ஓரத்தில் குடை அமைத்து சிம் கார்டு விற்பனை செய்பவர்கள் வடமாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு அடையாள அட்டை இல்லாமல் சிம் கார்டு  விற்பனை செய்கின்றனர். இதனால் குற்ற செயல்களும் அதிகரிக்கும். மேலும் அரசின் விதிப்படி சாலை ஓரத்தில் சிறு கடைகள் வைத்து விற்பனை செய்யும் வியாபாரிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சாலை ஓரத்தில் சிம் கார்டுகளை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளனர்.

Categories

Tech |