Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வெளியூர் சென்ற தொழிலாளி…. மர்மநபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

இரண்டு வீடுகளில் தங்க நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கமிட்டியார் காலனியில் தர்மா என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட சென்டிரிங் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தர்மா கடந்த 27-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றுவிட்டார். இதனையடுத்து தர்மா திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 11 பவுன் தங்க நகை மற்றும் ரூ.30 ஆயரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது.

இதேபோன்று அவிநாசி நியூ டவுன் பகுதியில் ஆட்டோ டிரைவரான மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மணிகண்டன் கடந்த 27-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்று விட்டார். அதன் பின் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 1/2 பவுன் கம்மல், வெள்ளி கொலுசு ஆகியவற்றை திருடி சென்றது தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |