சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காதலன்-சித்தப்பா ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கணியம்பூண்டி பகுதியில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்த விஷ்ணுராம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் வாலிபரிடம் இருந்து சிறுமியை மீட்டுள்ளனர். இந்நிலையில் சிறுமியின் சித்தப்பா பிரகாஷ் என்பவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனையறிந்த சிறுமியின் பெற்றோர் திருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் 16 வயது சிறுமிக்கு காதலன் விஷ்ணுராம், சித்தப்பா பிரகாஷ் ஆகிய இருவரும் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.