Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

4 நாட்களாக கொட்டி தீர்த்த மழை …. தெருக்களில் தேங்கி நிற்கும் தண்ணீர்…. மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!!!

கனமழை பெய்துள்ளதால் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தம்பிக்கோட்டை, மறவக்காடு, ஆதிராம்பட்டினம், எரிப்புறக்கரை, கீழத்தோட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 4 நாட்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் பலத்த காற்றுடன் கனமழை செய்து வருகிறது.

இதனால் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையங்கள், கிழக்கு கடற்கரை சாலை, சுப்பிரமணியர் கோவில் உள்ளிட்ட தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த கனமழையால் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |