திருச்செங்கோட்டில் நடைபெற்ற மஞ்சள் ஏலமானது 70 லட்சத்துக்கு விற்பனையானது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு வேளாண்மை உத்திரத்தையாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் தலைமையிலான மஞ்சள் ஏலமானது நேற்று திருச்செங்கோட்டில் நடைபெற்றது.
இந்த ஏலத்தில் விரலி ரக மஞ்சள் குவிண்டால் ரூ.7,102 முதல் ரூ.8,662 வரையில் விற்பனை செய்யப்பட்டது. கிழங்கு ரக மஞ்சள் குவிண்டால் ரூ.6,802 முதல் ரூ.7,609 வரையிலும், பனங்காளி ரக மஞ்சள் குவிண்டால் ரூ.10,412 முதல் ரூ.14,012 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. மொத்தம் 1,600 மூட்டை மஞ்சள் ரூ.70 லட்சத்துக்கு ஏலம் போனதாக அதிகாரிகள் கூறினார்கள்.