மொபட் அறிவிப்பு பலகையின் மீது மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பெரியக்கோட்டை பகுதியில் இளங்கோ என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரவீன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று பிரவீன் வடுக்கண்குத்தகை சாலையில் தனது மொபட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மொபட் நிலைத்திடுமாறி சாலை ஓரம் வைக்கப்பட்டிருந்த வேக கட்டுப்பாட்டு அறிவிப்பு பலகை மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரவீனின் தாயார் ஆனந்தி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.