விஷ வாயு தாக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள பெருங்குடி கல்லுக்குட்டை அன்னை சந்தியா நகரில் சரவணன்(49) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டில் இருக்கும் 7 அடி ஆழடைய உறை கிணற்றை காளிதாஸ்(55) என்பவருடன் இணைந்து சுத்தம் செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக விஷவாயு தாக்கி காளிதாஸ் மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சரவணன் காளிதாஸை காப்பாற்ற முயற்சி செய்தபோது அவரும் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
இதனை அடுத்து அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு இருவரையும் பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் காளிதாஸ், சரவணன் ஆகியோர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.