தமிழகத்தில் பொதுமக்கள் மின்தடை மற்றும் மின் திருட்டு உள்ளிட்ட மின்சாரம் தொடர்பான அனைத்து வகை புகார்களையும் மின்னகம் நுகர்வோர் சேவை மையத்தில் 9498794987 என்ற அலைபேசி எண்ணை 24 மணி நேரமும் தெரிவிக்கலாம் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. தற்போது மின்தடை உள்ளிட்ட அனைத்து புகழ்களையும் தெரிவிக்க கூடுதல் வசதியாக அலைபேசியை அறிமுகப்படுத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
அந்த செயலியை புதிதாக உருவாக்குவதற்கு பதிலாக ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள மின் கட்டணம் செலுத்தக்கூடிய tangedco app என்ற அலைபேசி செயலி மூலமாக கூடுதலாக புகார் அளிக்கும் வசதியை ஏற்படுத்த மின்வாரியம் முடிவு செய்துள்ளது. மேலும் மின்தடை தொடர்பான புகார்களை அலைபேசி செயலில் தெரிவிக்கும் போது மின் இணைப்பு எண்ணின் முகவரியை கணினி மூலமாக உடனே அறிய முடியும் எனவும் அதனால் அலைப்பேசி செயலியில் புகார் அளிக்கும் வசதி நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.