சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக நாளை அதாவது ஆகஸ்ட் 1ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் ரத்து செய்யப்படுவதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்தியில், சென்னையில் பராமரிப்பு படி காரணமாக நாளை காலை 9 மணி முதல் மதம் இரண்டு மணி வரை மின்விநியோகம் ரத்து செய்யப்படுகிறது.
அதனபடி தாம்பரம்: சிட்லப்பாக்கம் முதல் மெயின் ரோடு, சுப்பிரமணியன் தெரு, ராமசந்திரா சாலை, பத்பநாபன் தெரு, ஐய்யாசாமி தெரு, ஜோதி நகர் 3-வது தெரு பகுதிகளில் மின்தடை செய்யப்படும். பராமரிப்பு பணிகள் முடிவடைந்ததும் மின் வினியோகம் மீண்டும் கொடுக்கப்படும்.