Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“மின்வேலியில் சிக்கி உயிரிழந்த காட்டு யானை”…. 2 விவசாயிகளுக்கு 3 வருடங்கள் சிறை தண்டனை….!!!!!

மின்வேலியில் சிக்கி காட்டு யானை உயிரிழந்த வழக்கில் இரண்டு விவசாயிகளுக்கு மூன்று வருடங்கள் சிறை தண்டனை வழங்கி கூடலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட வடவயல் பகுதியில் சென்ற 2000 வருடம் விவசாய நிலத்தில் காட்டு யானை உயிரிழந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வனத்துறை சென்று பார்த்த பொழுது மின்வேலியில் சிக்கி சுமார் 15 வருட காட்டு யானை இறந்து கிடந்துள்ளது.

இதைத்தொடர்ந்து வனத்துறை தீவிர விசாரணை நடத்தி அப்பகுதியைச் சேர்ந்த மாணிக்கம், பிரபாகரன், ஹரிதாஸ் உள்ளிட்ட மூன்று விவசாயிகளை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தினார்கள். இந்த வழக்கானது 22 வருடங்களாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் மாணிக்கம் மற்றும் பிரபாகரன் உள்ளிட்டோரை குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டு மூன்று வருடங்கள் சிறை தண்டனையும் தலா 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. ஹரிதாஸ் மீது குற்றம் நிரூபிக்கப்படாததால் வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

Categories

Tech |