தேசிய அணிகளுக்கான 2020ஆம் ஆண்டின் மகளிர் ஃபெட் கப் தொடர் தொடங்கியுள்ளது. அதன் நேற்றையப் போட்டியில் ஆஸ்திரேலியன் ஓபன் பட்டத்தை வென்ற அமெரிக்க வீராங்கனை சோஃபியா கெனினை எதிர்த்து லாட்வியாவின் செவஸ்டோவா ஆடினார்.
இந்த ஆட்டத்தில் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் சோஃபிய கெனின் வெற்றிபெற்றார். இந்த வெற்றியின் மூலம் அமெரிக்க அணி 1-0 என்று முன்னிலைப் பெற்றுள்ளது.
இதுகுறித்து சோஃபியா கெனின் பேசுகையில், ”ஆஸ்திரேலியன் ஓபன் தொடரிலிருந்து நேரடியாக இந்தத் தொடரில் பங்கேற்பது சிறிது பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த வெற்றி எனது ஆட்டத்தில் கவனம் செலுத்த உதவியிருக்கிறது” என்றார்.