இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொற்று பரவிவருகிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனவே கொரோனா காரணமாக விமான சேவை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் கொரோனா காரணமாக விமான சேவை நிறுத்திவைக்கப்பட்டிருந்த சென்னை – லண்டன் விமான சேவை நாளை முதல் மீண்டும் தொடங்குகிறது.
அதன்படி. பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான சேவை நாளை முதல் வாரத்தில் 7 நாட்களும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள ஹியாத்ரோ விமான நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த விமானம் அதிகாலை 3.30 மணிக்கு சென்னை வந்தடையும். மீண்டும் சென்னையில் இருந்து அதிகாலை 5.32 மணிக்கு லண்டன் புறப்பட்டு செல்லும்.