விஜய் டிவி சரத் நிர்வாண போட்டோஷூட் எடுத்து இணையத்தில் பதிவிட்டதை பார்த்த நெட்டிசன்கள் அவரை விளாசி வருகின்றார்கள்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரை உலகிற்கு அறிமுகமானார் சரத். மேலும் இவர் விஜய் டிவியில் குக் வித் கோமாளி. மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடையே பிரபலமானார்.
இந்த நிலையில் சினிமா பிரபலங்களான விஜய் தேவரகொண்டா, ரன்வீர் சிங், விஷ்ணு விஷால் உள்ளிட்டோர் நிர்வாண போட்டோ ஷூட் எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.
இதற்கு விமர்சனங்கள் பல எழுந்த நிலையில் தற்பொழுது சரத்தும் ஆடையில்லாமல் போட்டோ ஷூட் நடத்தி இணையத்தில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றார்கள். நெட்டிசன்கள் கூறியுள்ளதாவது, நீங்களுமா ப்ரோ என ஆரம்பித்து இதெல்லாம் ஒரு பொழப்பா என வரை கேட்டு கடுமையாக விளாசி இருக்கின்றனர். மேலும் சிலரோ சீக்கிரம் குணமடைய வாழ்த்துக்கள் என நக்கலாக கமெண்ட் செய்துள்ளனர். இதை தொடர்ந்து பார்த்து ப்ரோ வழக்கு போட்டு விட போகிறார்கள் என எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். தற்பொழுது இவரின் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.