கோவை அருகிலுள்ள ஒத்தக்கால் மண்டபம் முதல்நாச்சிபாளையம், சொக்கனூர், முத்துக்கவுண்டனூர், பெரும்பதி வழியாக வறட்டாறு செல்கிறது. இந்த ஆற்றில் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடும். இந்த மழை தண்ணீரை தேக்குவதற்கு போதிய தடுப்பணைகள் இல்லாததால் மழைநீர் வீணாக கேரளாவுக்கு சென்றது. இந்நிலையில் கிணத்துக்கடவு மேற்கு பகுதியில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வரட்டாசியின் குறுக்கே தடுப்பணை கட்டி தர வேண்டும் என்று அந்த பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதனை தொடர்ந்து வற்றட்டாறில் முத்துக்கவுண்டனூர்- பாலர்பதி இடையே நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 24 லட்சம் செலவில் தடுப்பணை கட்டப்பட்டது.
இதனையடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்பாக பெய்த கனமழை காரணமாக வறட்டாறில் தண்ணீர் வரத்து அதிகரித்து. இதன் காரணமாக புதிதாக கட்டப்பட்ட தடுப்பணை நிரம்பியது. இது குறித்து விவசாயிகள் கூறியது, எங்களது கோரிக்கை ஏற்று நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த தமிழக அரசு வறட்டாறின் குறுக்கே தடுப்பணை கட்டியது. தற்போது இந்த தடுப்பணையில் சுமார் 2.6 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கியுள்ளது என்று பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளனர். இதனால் இந்த பகுதியில் நீர்மட்டம் உயரும். இதனால் விவசாயிகள் தங்கு தடையின்றி பயிர் சாகுபடி பணிகளை மேற்கொள்ளலாம். மேலும் தென்னை மரங்களும், விவசாயமும் செழிப்படையும். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளனர்.