சண்டிகரில் நடைபெற்ற தேசிய போதைப்பொருள் தடுப்பு மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அந்த மாநாட்டின் போது சென்னை, கவுகாத்தி,டெல்லி மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் சுமார் 100 கோடி மதிப்புள்ள 30 ஆயிரம் கிலோ போதை பொருட்களை அழிக்க அமித்ஷா உத்தரவிட்டார்.அந்த போதைப் பொருட்களை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீ வைத்து எரித்தனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
மேலும் கடந்த 2006 – 2013ல், 768 கோடி ரூபாய் மதிப்புள்ள, 1.52 லட்சம் கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அதே நேரத்தில், 2014 – 2021 காலகட்டத்தில், 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள, 3.3 லட்சம் கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. நாட்டின் எல்லை மாநிலமான பஞ்சாபில், போதைப் பொருள் புழக்கம் அதிகமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் பிரச்னையை எதிர்கொள்ள மாநில அரசுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது என அவர் தெரிவித்தார்.