Categories
தேசிய செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம்…. நாளை(ஆகஸ்ட் 1) முதல் தரிசன டிக்கெட்…..!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த வருடம் செப்டம்பர் 7ஆம் தேதி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு இந்த வருடம் பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது. இந்த பிரம்மோற்சவ விழா நாட்களில் விஐபி பிரேக் தரிசனம்,முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தரிசன சேவை ரத்து செய்யப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதில் பக்தர்கள் கலந்து கொள்ள ஆன்லைன் தரிசனம் டோக்கன் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பிரமோற்சவ விழாவில் கலந்து கொள்ள விருப்பமுள்ள பக்தர்கள் பாரம்பரிய உடைய காலை 7 மணி அளவில் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் ஒன்றுக்கு வரவேண்டும்.

மேலும் தரிசன டோக்கன் களுடன் ஏதேனும் அசல் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை பக்தர்கள் கொண்டு வர வேண்டும். இது குறித்த கூடுதல் விவரங்களை அறிய www.tirumala.org அல்லது www.tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த  விழாவுக்கான டிக்கெட் விநியோகம் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் ரூ. 2,500 செலுத்தி முன்பதிவு செய்யலாம்.

Categories

Tech |